• Skip to primary navigation
  • Skip to main content

AstrologyView

Angel Number and Horoscope News

  • Horoscopes
  • Angel Numbers
  • 2023 Yearly Horoscope
  • January Horoscope 2023
  • Horoscope 2024

Tamil

Amma Kavithaigal in Tamil – அம்மா கவிதைகள்

By Astrologer on October 18, 2022 0

Amma Kavithaigal

Amma Kavithaigal in Tamil – அம்மா இந்த உலகை காட்டியவள். அம்மா வார்த்தையே ஒரு அற்புதமான சொல். குழந்தையை தவிர எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் ஒரு ஜீவன். தன் பிள்ளைதான் அவளுக்கு உலகம்.

இந்த உலகில் யாரும் தாங்கமுடியாத வலியை தங்கி பிள்ளையை ஈன்றுஎடுப்பவள். தன் பிள்ளைக்கு எந்த ஒரு வலியையும் தராதவள்.

இந்த பூமியை நமக்கு காட்டியவள். இந்த உலகில் போராட கற்றுக்கொடுத்தவள். என்றும் தன் பிள்ளைகளை பற்றி எண்ணுபவள். தனக்கு இல்லை என்றாலும் தன் பிள்ளைக்காக கொடுப்பவள்.

இப்படி அம்மாவை வர்ணிக்க இந்த ஜென்மம் போதாது. இந்த பக்கத்தில் சில அம்மா கவிதைகள் உங்களை உற்சாகப்படுத்தட்டும்.

Amma Kavithaigal

அம்மா கவிதைகள் – Amma Kavithaigal in Tamil 

  • மூன்றெழுத்து கவிதை சொல்ல சொன்னால் முதலில் சொல்வான் அம்மா என்று.
  • அம்மாவின் அன்பிற்கு இணை அம்மாதான். அம்மாவை விட பாசம் காட்ட இந்த உலகில் யாரும் இல்லை.
  • ஆயிரம் விடுமுறை வந்தாலும் அம்மாவின் சமையலுக்கு விடுமுறை இல்லை.
  • அம்மா என்ற உறவு இல்லாவிட்டால் இந்த உலகம் அனாதைதான்.
  • மூச்சடக்கி ஈன்றாள் என்னை. மூச்சுள்ள வரை காப்பேன் உன்னை.
  • நான் பார்த்த முதல் தெய்வம் அம்மா.

Amma Kavithaigal in Tamil

  • உன் கருவறையை எனக்கு கொடுத்து என்னை காத்தவளே.
  • நான் முதலில் பார்த்த அழகிய பெண் அம்மா.
  • நான் என்றும் பாதுகாப்பாக இருக்கும் இடம் உன்னுடைய மடி.
  • இன்பம் துன்பம் எது வந்தாலும் தன் அருகில் வைத்து காப்பாள் அன்னை.
  • அம்மா என்று சொல்லும்போதே உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் உன்னை வணங்குகிறது.
  • நம் உள்ளத்தின் உள்ளே வாழும் ஒரு உன்னதமான ஆத்மா அன்னை.
  • முதலில் நான் பேச பழகியதும் உன் பெயரை தான். முதலில் நான் எழுத பழகியதும் உன் பெயரை தான்.

Amma Kavithaigal in Tamil

  • உருவம் அறிய என்னை கருவிலும் காதல் செய்தவளே.
  • வற்றாத ஊற்று. வறுமையிலும் செம்மையாக கிடைப்பது அம்மாவின் அன்பு மட்டுமே.
  • என்னை அடிக்கும்போது இருந்த வலியை விட என்னை அணைக்கும் போது இருந்த பாசம்தான் அதிகம். அவள்தான் அம்மா.
  • மழையில் நனைந்த என்னை எல்லாரும் திட்டிய போது என்தலையை துவட்டிவிட்டு மழையை திட்டுவாள் அவள் அம்மா.
  • குழந்தையின் அழுகையின் அர்த்தம் புரிந்த அகராதி புத்தகம் அம்மா.
  • நாம் நினைப்பதை நமக்கு நடத்தி கட்டுபவள் அம்மா.

Amma Kavithaigal in Tamil

  • வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிக சிறந்த சொல் அம்மா.
  • பிறப்புறுப்பை கிழித்து உத்திர முலம் பூசி பத்து திங்களிலே ஜீவன் வெளிவர அய்யோ அம்மா என்று வேதனையால் துடித்து கடவுளிடம் குழந்தையையும் எமனிடம் தன்னையிம் அடகு வைத்தவள் அம்மா.
  • அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு செருப்பாக பிறந்து இந்த ஜென்மத்தில் தங்கியவளை அடுத்த ஜென்மத்தில் நான் ஒருமுறையாவது தாங்க வேண்டும்.
  • தரை மீது நடந்தால் கால் நோகும் என்று தன்னை இடுப்பில் தூக்கி செல்பவள் அம்மா.
  • அம்மா உன் அன்பிற்கு நான் அடிமை. உன் அன்பிற்கு நிகரான ஒன்று இல்லை.
  • பிறப்பு முதல் இறப்பு வரை உன்னுடைய பாசம் எனக்கு வேண்டும். பாசத்தை மறக்கும் நிலைவரின் நான் இறந்திருக்க வேண்டும்.
  • படுத்துக்கொண்டு சொர்கத்தை காணலாம் தலையணையில் அல்ல. தாயின் மடியில்.

Also Read: Sai baba 108 potri

 

October Rasi Palan 2022 (அக்டோபர் மாத ராசி பலன்)

By Astrologer on October 10, 2022 0

October Rasi Palan

October Rasi Palan – (அக்டோபர் ராசி பலன் 2022) எப்படி இருக்க போகிறது என்பதை காணலாம். அக்டோபர் மாதம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் இந்த 2022.

இந்த அக்டோபர் மாதம் சில ராசி காரர்களுக்கு உச்சத்தையும் சில ராசி காரர்களுக்கு நீச்சத்தையும் கொடுக்கும். உச்சம் பெறுவது புதனாலும் ஆட்சி பெறுவது சுக்கிரானாலும் நடக்கும்.

அக்டோபர் மாதம் பல ராசி காரர்களுக்கு திடீர் யோகத்தை தர போகிறது. வேலை, அன்பு, குடும்பம், காதல், திருமணம் போன்றவை இந்த அக்டோபர் 2022 மாதத்தில் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம் | October Rasi Palan

இந்த மாதம் செவ்வாய் முதல் பாதியில் இரண்டாவது வீட்டிலும் அடுத்த பாதியில் மூன்றாவது வீட்டிலும் இடப்பெயர்ச்சி அடைவது சிறப்பானது. இதனால் உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் உங்களுக்கு இந்த மாதத்தில் வேலை கிடைக்கும்.

உங்களுடைய குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். இந்த மாதத்தில் உங்களுக்கு வெளிநாட்டு வேலைக்கு கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். நீங்கள் செய்யும் தொழில் சார்ந்த பயணங்களால் நன்மை உண்டாகும். மேஷ ராசிகாரர்களே, இந்த மாதம் அக்டோபர் 2022 உங்களுக்கு நன்மை தரும் மாதமாக அமைந்துள்ளது.

ரிஷபம் | October Rasi Palan

இந்த மதம் உங்களுக்கு கொஞ்சம் நடுத்தரமான மாதமாக அமைந்துள்ளது. ராசி நாதன் உங்களுடைய ராசியில் நீச்சம் அடைந்திருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு சற்று சிறப்பு குறைந்த மாதமாக அமைந்துள்ளது.

இதனால் உங்களுடைய புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரனின் அருளால் வெற்றிகளும் யோகங்களும் உங்களை தேடி வரும். உங்களுக்கு பெண்களால் நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு சிறப்பான வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷப ராசி நேயர்களே நீங்க திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். உங்களுடைய வருமானமும் அதிகரிக்கும் அதே சமயம் இந்த மாதம் உங்களுடைய செலவுகளும் அதிகரிக்கும். உங்களுக்கு வாய்ப்புகள் வீடுதேடி வருவதற்கு வாய்ப்புள்ளது. அதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மிதுனம் | October Rasi Palan

உங்களுடைய முயற்சிகளுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய ராசி நாதன் புதன் உச்சத்தில் பயணம் செய்கிறார். ஆதலால் நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாக இந்த அக்டோபர் மாதம் அமைந்துள்ளது.

உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களும் நண்மைகளும் உண்டாகும்.
உங்களுக்கு பணியில் இருந்த சுமைகள் அனைத்தும் நீங்கும் மாதமாக அமைந்துள்ளது. புதிதாக வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

உங்களுடைய வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். வருமானம் அதிகமாகும் கடன் தொல்லைகள் நீங்கும் மாதமாக அக்டோபர் 2022 அமைந்துள்ளது.

October Rasi Palan

கடகம் | October Rasi Palan

இந்த மாதம் உங்களுக்கு குருவின் பார்வை இருப்பதால் நிறைய அற்புதங்கள் நடைபெறும். உங்களுடைய வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய மூன்றாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடியிருப்பது உங்களுக்கு சிறப்பானதாக உள்ளது.

உங்களுடைய வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் அனைத்தும் தீர்வதற்கு வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் உங்களுக்கு சிறப்பு கிடைக்கும். அதிக வருமானம் தேடி வரும்.

உங்களுடைய புதிய முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். இந்த மாதத்தில் நீங்கள் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

சிம்மம் | October Rasi Palan

உங்களுடைய சூரியன் ராசி நாதன் குரு மற்றும் புதனுடன் இணைந்திருப்பது இந்த மாதத்தில் சிறப்பை தருகிறது. இந்த மாதத்தில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் நீச்சநிலை அடைந்தாலும் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமைந்துள்ளது.

நீங்கள் அனுபவித்த கடன் தொல்லைகள் இந்த மாதத்தில் முடிவுக்கு வர போகிறது. உங்களுடைய பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். உங்களுடைய அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுக்கு வாகனம் மற்றும் நிலம் யோகம் தேடி வரும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி | October Rasi Palan

கன்னி ராசி காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய மாதமாக இந்த அக்டோபர் மாதம் அமைந்துள்ளது. நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்களுடைய ராசி நாதனை குரு பார்வை இடுகிறார். எனவே உங்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. உங்களுடைய புதிய முயற்சிகள் கைகூடி வரும்.

பழைய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களுடைய பணத்தை திரும்ப தருவார்கள். உங்களுக்கு தலைமை பொறுப்பு தேடி வரும். அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

துலாம் | October Rasi Palan

உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன். சுக்கிரன் இந்த அக்டோபர் 2022 மாதத்தில் நீச்சம் அடைவதை உங்களுடைய முயற்சிகளில் சிறு சிறு தடைகள் உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் உச்சத்தை அடைய போகிறார். அந்த காலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் காலமாக அமைந்துள்ளது.

உங்களுக்கு சாதனைகள் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது. உங்களுடைய குடும்பத்தில் இருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோசம் காணப்படும். உங்களுடைய தொழில் விஷயமாக வெளிநாடுகள் செல்வீர்கள். உங்களுக்கு இந்த அக்டோபர் 2022 மாதத்தில் திருப்பங்கள் ஏற்படும். அது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.

விருச்சிகம் | October Rasi Palan

உங்களுடைய ராசி நாதன் செவ்வாய். உங்களுக்கு இந்த மாதம் அக்டோபர் 2022 நிறைய நன்மைகளை தர போகிறது. உங்களுடைய குடும்பத்தில் சந்தோசம் காணப்படும். உங்களுடைய ராசியில் குருவின் பார்வை உள்ளது. உங்களுக்கு சாதகமான அம்சத்தை தர போகிறது.

விருச்சிக ராசி காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் வெற்றி உங்களை தேடி வரும். நீங்கள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் பயணங்களில் வெற்றிகள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றிகளை தேடி தரும். மன நிம்மதி நிறைந்த மாதமாக இருக்கும். உங்களுடைய சோதனை காலங்களை சாதனைகளாக மாற்றுவீர்கள்.

தனுசு | October Rasi Palan

தனுசு ராசி உங்களின் ராசி நாதன் குருவாகும். உங்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கிறது. நல்ல வேலை கிடைக்கும் மாதம். உங்களை தேடி உங்களுடைய நபர்கள் வருவார்கள்.

உங்களுடைய சிக்கல்கள் முடிவுக்கு தேடி வரும். உங்களுடைய பணியில் இருந்த சுமைகள் நீங்கும். பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் தேடிவரும் மாதமாக இந்த அக்டோபர் 2022 உள்ளது.

மகரம் | October Rasi Palan

மகர ராசி நேயர்களே, உங்களுடைய ராசி நாதன் சனி பகவான். சங்கடத்தில் இருந்த உங்களுக்கு விடிவு தரும் மாதமாக இந்த அக்டோபர் 2022 உள்ளது. உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

பணியில் இருந்த மன சங்கடங்கள் அனைத்தும் சரியாகும். எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக சமாளிக்கும் மனம் உங்களுக்கு உண்டாகும். நல்ல விஷயங்கள் நடக்கும்.

கும்பம் | October Rasi Palan

கும்ப ராசி நேயர்களுக்கு சனி பகவான் ராசி நாதனாக உள்ளார். உங்களுக்கு எந்த மாதம் எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும்.

உங்களுடைய தொழிலில் அகலகால் வைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் உங்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும். நீங்கள் நிறைய அனுபவங்களை கற்று கொள்வீர்கள். அதே சமயம் கவனம் மிக அவசியம்.

மீனம் | October Rasi Palan

உங்களுடைய ராசி நாதன் குரு பகவான். புதன் உங்களுடைய ராசியை பார்வை இடுகிறார். சூரியன் மற்றும் சுக்கிரனின் நேரடி பார்வை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. எனவே இந்த மாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. சூரியன் மற்றும் சுக்கிரனின் பார்வையால் உங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.

உங்களுக்கு இந்த மாதம் திடீர் பணவரவு வரப்போகிறது. உங்களுக்கு நன்மை தரும் மாதமாக இந்த அக்டோபர் 2022 மாதம் அமைந்துள்ளது.

Read More: Horoscope 2023

Great Tamil Vidukathaigal With Answers 2023 – தமிழ் விடுகதைகள்

By Astrologer on May 22, 2022 0

Tamil Vidukathaigal

Tamil Vidukathaigal – விடுகதை என்பது நமது அறிவை சோதிக்கும் ஒரு நல்ல வாக்கியம். ஒரு விடுகதை நாம் கண்டுபிடிக்க நமது மூளையை நாம் அதிகம் உபயோக படுத்துவோம். இதனால் நமது சிந்தனை திறன் அதிகம் வளரும். விடுகதை என்பது நாம் கூறுகின்ற வாக்கியத்திலேயே அதனுடைய பொருள் அடங்கி இருக்கும். மறை பொருள் என்றும் கூறலாம்.

விடுகதைகள் நாம் வினா எழுப்பி அதற்கு பதில் கூறுவதாக இருக்கும். இந்த விடுகதைகளின் நோக்கமா அறிவூட்டுவது மற்றும் நமது சிந்தனையை தூண்டுவது ஆகும். விடுகதையை விரும்பாதவர்கள் எவருமே இருக்க முடியாது.

Tamil Vidukathaigal

ஒரு விடுகதைக்கு விடை தெரியவில்லை என்றால் நாம் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம். விடை தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவோம்.

தமிழ் விடுகதைகள்: (Tamil Vidukathaigal)

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடுகதையை விரும்புபவர்கள் தான். நமது முன்னோர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கண்டுபுடித்த விளையாட்டு தான் இந்த விடுகதை கூறுவது.

இந்த விடுகதைகள் மூலமாக நமது மூளை மேம்படும். அறிவு திறன் வளரும். இந்த விடுகதை விளையாட்டு எளிமையானது மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது.

அனைவருக்கு பிடித்த விடுகதைகளும் அதனுடைய பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை படித்து அனைவரும் மகிழ்ச்சி பெறுங்கள்.

Tamil Vidukathaigal – தமிழ் விடுகதைகள்

  1. அழகான பெண் ஒருத்தி பாதிநாள் வளர்வாள் பாதிநாள் குறைவால் அவள் யார்?விடை: நிலா
  2. ஊசி போல உடம்பு அவன் நிற்பது எப்போதும் மேடையில் தான் அவன் யார்?விடை: ஊதுபத்தி.
  3. மூன்று கிளி மூன்று நிறம் மூன்றுக்குமே வேற குணம் கூண்டுக்குள் போட்டதும் அத்தனையும் சிகப்புநிறம் அது என்ன?விடை: வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு.
  4. அடித்தாலும், உதைத்தாலும் அழுக்கமாட்டான் அவன் யார்?விடை: பந்து.
  5. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?விடை: தேள்.
  6. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்?விடை: வெண்டை.
  7. கொதிக்கும் கிணற்றில் குதித்து உப்பி வருவான் அவன் யார்?விடை: பூரி.
  8. ஒரு அரண்மனையில் 32 காவலாளர்கள் அவன் யார்?விடை: பற்கள்.
  9. காலையில் வந்த விருந்தாளி மாலையில் காணவில்லை அவன் யார்?விடை: சூரியன்.
  10. இடி இடிக்கும் மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது. அது என்ன?விடை: பட்டாசு.
  11. கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான். அவன் யார்?விடை: கரும்பு.
  12. உடம்பில்லா ஒருவன் 10 சட்டை அணிந்திருப்பான் அவன் யார்?விடை: வெங்காயம்.
  13. கடல் நீரில் பிறந்து வளர்ந்து, மழை நீரில் மடிவது. அது என்ன?விடை: உப்பு.
  14. உயிர் இல்லாத நீதிபதி ஒருத்தன் ஒழுங்கான நியாயம் கூறுவான். அவன் யார்?விடை: தராசு.
  15. பார்த்தால் கல் தொட்டால் நீர். அவன் யார்?விடை: பனிக்கட்டி.

Vidukathaigal in Tamil with Answers (Tamil vidukathaigal)

  • தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம். அது என்ன?விடை: அன்னாசிப்பழம்.
  • வயிற்றில் விரல் சுமப்பான் தலையில் கிரீடம் சுமப்பான். அவன் யார்?விடை: மோதிரம்.
  • அடிக்காமலே பிள்ளை அலறி துடிக்குது. அது என்ன?விடை: சங்கு.
  • அன்னநடை நடந்தாலும் அலறும் தலைப்பகுதி. அது என்ன?விடை: யானை.
  • அறைகளோ அறுநூறு. அத்தனையும் ஒரே அளவு. அது என்ன?விடை: தேன் கூடு.
  • அந்தி வரும் நேரம். அவள் வரும் நேரம். அவள் யார்?விடை: நிலா.
  • அம்மா கொடுத்த தட்டில் நீர் ஓட்டவில்லை. அது என்ன?விடை: தாமரை இலை.
  • அறையடி புல்லில் ஏறுவான் இறங்குவான். அவன் யார்?விடை: பேன்.
  • அந்தரத்தில் தொங்குவது செம்பும், தண்ணீரும். அது என்ன?விடை: இளநீர்.
  • அறுக்க உதவாத கதிருக்கு அரிவாள். அது என்ன?விடை: பிறைச்சந்திரன்.
  • அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை. அது என்ன?விடை: வகிடு.
  • அம்மா புடவையை மடிக்க முடியாது. அப்பா பணத்தை என்ன முடியாது. அது என்ன?விடை: வானம், விண்மீன்.
  • யாரும் ஏற முடியாத மரம். கிளைகள் இல்லாத மரம். அது என்ன?விடை: வாழை மரம்.
  • அடிவாங்கி அடிவாங்கி ஊருக்கு செய்தி சொல்லுவான். அவன் யார்?விடை: தண்டோரா.
  • இரவல் கிடைக்காதது. இரவில் கிடைப்பது அது என்ன?விடை: கடிகாரம்.

Tamil Vidukathaigal

இதயம் போல் துடித்து இருக்கும். இரவு பகல் முழித்துஇருக்கும். அது என்ன?

விடை: கடிகாரம்.

கலைக்கடிக்கும் செருப்பால காவல் காக்கும் நாய் இல்லை? அது என்ன?

விடை: முள்.

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அது என்ன?

விடை: தொலைப்பேசி.

வெட்டிக்கொள்வான் ஆனால் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

விடை: கத்தரிக்கோல்.

அள்ள முடியம் ஆனால் கிள்ள முடியாது. அது என்ன?

விடை: நீர்.

முள் வீட்டுற்குள்ளே மஞ்சள் குழந்தைகள். அது என்ன?

விடை: பலாப்பழம்.

மேலே குறிப்பிட்டுள்ள விடுகதைகளை நீங்கள் படித்தும் விளையாடியும் மகிழுங்கள்.

Great Aigiri Nandini Lyrics in Tamil to Read| அயிகிரி நந்தினி பாடல் வரிகள்

By Astrologer on April 9, 2022 0

Aigiri nandini lyrics in Tamil Aigiri nandini lyrics in tamil – மகிஷாசுரனை வதம் செய்ய அனைத்து கடவுள்களின் சக்தியால் உருவானவள் மகிஷாசுரமர்த்தினி. அசுரனை அழித்த அம்மனின் கோபத்தை சாந்தம் படுத்த இந்த பாடல் பாடப்பட்டது.

Aigiri Nandini Lyrics in Tamil – மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் வரிகள்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (1) ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி கில்பிஷ மோஷிணி கோஷரதே தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி துர்மத சோஷிணி ஸிந்துஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (2) Aigiri nandini lyrics in tamil
Aigiri nandini lyrics in Tamil
அயி ஜகதம்ப மதம்ப கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே சிகரி சிரோமணி துங்க ஹிமாலய ச்ருங்க நிஜாலய மத்யகதே மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி கைடப பஞ்ஜினி ராஸரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (3) அயி சதகண்ட விகண்டித ருண்ட விதுண்டித சுண்ட கஜாதிபதே ரிபுகஜ கண்ட விதாரண சண்ட பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட பதாதிபதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (4) அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே சதுர விசார துரீண மஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே துரித துரீஹ துராசய துர்மதி தானவ தூத க்ருதாந்தமதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (5) அயி சரணாகத வைரிவ தூவர வீர வராபய தாயகரே த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி சிரோதி க்ருதாமல சூலகரே துமிதுமி தாமர துந்துபி நாத மஹோ முகரீக்ருத திங்மகரே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (6) அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத தூம்ர விலோசன தூம்ரசதே ஸமரவிசோஷித சோணிதபீஜ ஸமுத்பவ சோணித பீஜலதே சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ தர்ப்பித பூத பிசாசரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (7) தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க கடத்பஹுரங்க ரடத்படுகே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (8)

Mahishasura Mardini lyrics in tamil – Aigiri nandini lyrics in tamil

ஸுரலலனா தததேயி ததேயி க்ருதாபினயோதர ந்ருத்யரதே க்ருத குகுத꞉ குகுதோ கடதாதி கதால குதூஹல கானரதே துதுகுட துக்குட திந்திமித த்வனி தீர ம்ருதங்க நினாதரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி ரம்யகபர்தினி ஶைலஸுதே (9) ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த பரஸ்துதி தத்பர விச்வ நுதே ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர ஸிஞ்ஜித மோஹித பூதபதே நடித நடார்த்த நடீ நட நாயக நாடித நாட்ய ஸுகான ரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (10) அயி ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமரா திபதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (11)

மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் – Aigiri nandini lyrics in tamil

ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக மல்லி தரல்லக மல்லரதே விரசித வல்லிக பல்லி கமல்லிக ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (12) அவிரலகண்ட கலன்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே த்ரிபுவன பூஷண பூதகலாநிதி ரூப பயோநிதி ராஜஸுதே அயிஸுத தீஜன லாலஸ மானஸ மோஹன மன்மத ராஜஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (13) கமல தலாமல கோமல காந்தி கலா கலிதாமல பாலலதே ஸகல விலாஸ கலாநிலய க்ரம கேலிசலத்கல ஹம்சகுலே அலிகுல சங்குல குவலய மண்டல மௌலிமிலத் பகுலாலிகுலே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (14) கர முரலீரவ வீஜித கூஜித லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி ரம்யக பர்தினி சைலஸுதே (15) கடிதடபீத துகூல விசித்ர மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர தன்சுல ஸன்னக சந்த்ரருசே ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித நிர்பர குஞ்ஜர கும்பகுசே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (16) விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைகநுதே க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக ஸங்கர தாரக ஸூனுஸுதே ஸுரத சமாதி ஸமான ஸமாதி ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (17) பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே அயி கமலே கமலா நிலயே கமலா நிலய ஸகதம் நபவேத் தவ பதமேவ பரம்பதமித் யனு சீலயதோ மமகிம் ந சிவே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (18) கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம் பஜதி ஸகிம் நசசீ குசகும்ப தடீ பரிரம்ப ஸுகானுபவம் தவ சரணம் சரணம் கரவாணி நதாமரவாணி நிவாஸிசிவம் ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (19)

Aigiri nandini lyrics in tamil

தவ விமலேந்து குலம் வதனேந்துமலம் ஸகலம் நனு கூலயதே கிமு புரஹூத புரீந்துமுகீ ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே மமது மதம் சிவநாமதனே பவதீ க்ருபயா கிமுத க்ரியதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (20) Aigiri nandini lyrics in tamil அயி மயி தீனதயாலு தயா க்ருபயைவ த்வயா பவித்வயமுமே அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி யதாஸி ததாஸனு மிதாஸிரதே யதுசித மத்ர பவத்யுரரீ குருதா துருதா பமபாகுருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே (21) Read More: Astrology View

Get to Know Great Sivapuranam lyrics in Tamil

By Astrologer on April 9, 2022 0

sivapuranam lyrics in tamil Sivapuranam lyrics in Tamil – சிவபுராணம் பாடல் வரிகள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சிவனடியார்களும் படிக்க விரும்புவது சிவபுராணம். மாணிக்க வாசகர் அருளியது திருவாசகம். திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வசனத்திற்கும் உருகார் என்று கூறுவார்கள். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்று இருக்கிற திருவாசகத்தின் முதல் பதிப்பாக வருவது நாம் போற்றி பாடக்கூடிய சிவபுராணம். சிவனின் பெரும் கருணையால் தன்னிகரற்ற சிவனின் திருவடியை அடைவதை பற்றி கூறுவது சிவபுராணம் ஆகும். தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!! Sivapuranam Lyrics in Tamil
sivapuranam lyrics in tamil

திருச்சிற்றம்பலம் –Sivapuranam lyrics in Tamil

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) Sivapuranam lyrics in Tamil ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) Sivapuranam lyrics in Tamil எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45) கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

Thiruvasagam Lyrics in Tamil – Sivapuranam lyrics in Tamil

மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55) விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60) Sivapuranam lyrics in Tamil தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65) பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70) அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75) நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80) மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85) போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90) அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம்!!! Read More: Angel Number 2525 Meaning Angel Number 1919 Meaning Angel Number 1212 Meaning Angel Number 5050 Meaning Angel Number 2929 Meaning
  • About
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy

Copyright © 2023