Rishaba Rasi Palan – ரிஷப ராசி நேயர்களே, உங்களுடைய புதிய முயற்சிகள் நீங்கள் எதிர்பார்த்த படி நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் பெரியவர்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய கல்வியின் தரம் மேம்படும்.
உங்களுடைய தாயாரின் உடலில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு எந்த வருடம் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் உங்களுடைய அந்தஸ்தில் குறை இருக்காது.
எத்தகைய கஷ்டங்களையும் நீங்கள் சுலபமாக சமாளிப்பீர்கள். உங்களுடைய அறிவாற்றல் அதற்கு உதவும். இந்த வருடம் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.
Rishaba Rasi Palan 2022
நீங்கள் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உங்களுக்கு வாக்கில் இந்தவருடம் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர் பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு பண வரவு வரும்.
உங்களுடைய தெய்வ பலத்தால் நீங்கள் எப்பொழுதும் சிறந்து விளங்குவீர்கள். உங்களுடைய பிள்ளைகளின் நலனில் நீங்கள் அக்கறை செலுத்துவது நல்லது.
அலுவலகத்தில் வேலை புரிபவர்களின் பணி நிரந்தரமாகவும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. திடீர் பண வரவு வருவது போல் திடீர் செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையையும் கவனமாக செய்வது நல்லது.
வியாபாரிகள் தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். நிறைய லாபம் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
Rishaba Rasi Palan
உங்களுடைய விடாமுயற்சியால் நீங்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய தொழில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உங்களுடைய தொழில் விரிவடையும்.
கலைத்துறையில் வேலை செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். ரிஷபராசி பெண்கள் இந்த வருடம் தன்னுடைய வேலைகளை மட்டும் செய்வது நல்லது.
பெண்கள் தங்களுடைய நல்ல பெயரை காத்துக்கொள்வதில் முகுந்த கவனமுடன் இருப்பது அவசியம். அதிகம் பேசுவதால் பழிச்சொற்கள் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள் தங்கள் நினைத்த துறையை தேர்தெடுத்து படிப்பார்கள். வெற்றிகள் கைகூடி வரும்.
Rishaba Rasi Palan கிருத்திகை 2,3,4 ம் பாதங்கள்
இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் நடக்க வாய்ப்புண்டு. முதலாளி மற்றும் தொழிலாளிகளிடையே சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகக்கூடும்.
விவசாயிகள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். நீங்க வெளியூர் பயணங்களை
முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. விவசாயிகளும் தொழிலாளர்களும் தங்களுக்கு வரும் கஷ்டத்தை தாமாகவே சமாளித்து விடுவார்கள்.
தங்களுடைய பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். காதல் புரிபவர்கள் பெற்றோரின் ஆசியை பெறுவார்கள்.
Rishaba Rasi Palan கிரகநிலை
உங்களுடைய தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி உங்களுக்கு நற்பலனை தருவதற்காக காத்திருக்கிறது. புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு இந்த வருடம் அதிகமாக இருக்கும்.
Rishaba Rasi Palan ரோகினி
இந்த வருடம் உங்களுக்கு சிறு சிறு கஷடங்கள் உண்டாக்கக்கூடும். குருவின் அருளால் நீங்கள் உங்கள் கஷ்டங்களை சீக்கிரம் நிவர்த்தி செய்வீர்கள்.
கொடுக்கல் வாங்கல் தொழில் செய்பவர்கள் கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முன் விரோதம் காரணமாக சண்டைகள் வர வாய்ப்புள்ளது.
நீங்கள் சமாதானமாக இருந்து உங்களுடைய காரியங்களை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். தொழில் புரிபவர்களுக்கு லாபம் ஓரளவிற்கு இருக்கும்.
உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய வருசமாக அமைத்துள்ளது. பொறியியல், விஞ்ஞானம், திரை துறைகளின் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இயந்திர தொழில் புரிபவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
மிருகசீஷம் 1,2, ம் பாதங்கள்
இந்த வருடம் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. கலை துறையை சேர்ந்தவர்கள் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொருளாதாரத்தில் உங்களுக்கு சங்கடம் இருக்காது. தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய வருடமாக அமைந்துள்ளது.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்துள்ளது. கலை துறையில் பணிபுரிபவர்களுக்கு கலகலப்பான வருடமாக இருக்கும். பணத்தில் குறைவோ கஷ்டமோ ஏற்படாது. நீங்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
குடும்பத்தில் சந்தோஷமும் லட்சுமிகடாஷியம் நிறைந்து காணப்படும்.
Leave a Reply