Amma Kavithaigal in Tamil – அம்மா இந்த உலகை காட்டியவள். அம்மா வார்த்தையே ஒரு அற்புதமான சொல். குழந்தையை தவிர எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் ஒரு ஜீவன். தன் பிள்ளைதான் அவளுக்கு உலகம்.
இந்த உலகில் யாரும் தாங்கமுடியாத வலியை தங்கி பிள்ளையை ஈன்றுஎடுப்பவள். தன் பிள்ளைக்கு எந்த ஒரு வலியையும் தராதவள்.
இந்த பூமியை நமக்கு காட்டியவள். இந்த உலகில் போராட கற்றுக்கொடுத்தவள். என்றும் தன் பிள்ளைகளை பற்றி எண்ணுபவள். தனக்கு இல்லை என்றாலும் தன் பிள்ளைக்காக கொடுப்பவள்.
இப்படி அம்மாவை வர்ணிக்க இந்த ஜென்மம் போதாது. இந்த பக்கத்தில் சில அம்மா கவிதைகள் உங்களை உற்சாகப்படுத்தட்டும்.
Read More: Horoscope View
அம்மா கவிதைகள் – Amma Kavithaigal in Tamil
- மூன்றெழுத்து கவிதை சொல்ல சொன்னால் முதலில் சொல்வான் அம்மா என்று.
- அம்மாவின் அன்பிற்கு இணை அம்மாதான். அம்மாவை விட பாசம் காட்ட இந்த உலகில் யாரும் இல்லை.
- ஆயிரம் விடுமுறை வந்தாலும் அம்மாவின் சமையலுக்கு விடுமுறை இல்லை.
- அம்மா என்ற உறவு இல்லாவிட்டால் இந்த உலகம் அனாதைதான்.
- மூச்சடக்கி ஈன்றாள் என்னை. மூச்சுள்ள வரை காப்பேன் உன்னை.
- நான் பார்த்த முதல் தெய்வம் அம்மா.
Amma Kavithaigal in Tamil
- உன் கருவறையை எனக்கு கொடுத்து என்னை காத்தவளே.
- நான் முதலில் பார்த்த அழகிய பெண் அம்மா.
- நான் என்றும் பாதுகாப்பாக இருக்கும் இடம் உன்னுடைய மடி.
- இன்பம் துன்பம் எது வந்தாலும் தன் அருகில் வைத்து காப்பாள் அன்னை.
- அம்மா என்று சொல்லும்போதே உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் உன்னை வணங்குகிறது.
- நம் உள்ளத்தின் உள்ளே வாழும் ஒரு உன்னதமான ஆத்மா அன்னை.
- முதலில் நான் பேச பழகியதும் உன் பெயரை தான். முதலில் நான் எழுத பழகியதும் உன் பெயரை தான்.
- உருவம் அறிய என்னை கருவிலும் காதல் செய்தவளே.
- வற்றாத ஊற்று. வறுமையிலும் செம்மையாக கிடைப்பது அம்மாவின் அன்பு மட்டுமே.
- என்னை அடிக்கும்போது இருந்த வலியை விட என்னை அணைக்கும் போது இருந்த பாசம்தான் அதிகம். அவள்தான் அம்மா.
- மழையில் நனைந்த என்னை எல்லாரும் திட்டிய போது என்தலையை துவட்டிவிட்டு மழையை திட்டுவாள் அவள் அம்மா.
- குழந்தையின் அழுகையின் அர்த்தம் புரிந்த அகராதி புத்தகம் அம்மா.
- நாம் நினைப்பதை நமக்கு நடத்தி கட்டுபவள் அம்மா.
Amma Kavithaigal in Tamil
- வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிக சிறந்த சொல் அம்மா.
- பிறப்புறுப்பை கிழித்து உத்திர முலம் பூசி பத்து திங்களிலே ஜீவன் வெளிவர அய்யோ அம்மா என்று வேதனையால் துடித்து கடவுளிடம் குழந்தையையும் எமனிடம் தன்னையிம் அடகு வைத்தவள் அம்மா.
- அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு செருப்பாக பிறந்து இந்த ஜென்மத்தில் தங்கியவளை அடுத்த ஜென்மத்தில் நான் ஒருமுறையாவது தாங்க வேண்டும்.
- தரை மீது நடந்தால் கால் நோகும் என்று தன்னை இடுப்பில் தூக்கி செல்பவள் அம்மா.
- அம்மா உன் அன்பிற்கு நான் அடிமை. உன் அன்பிற்கு நிகரான ஒன்று இல்லை.
- பிறப்பு முதல் இறப்பு வரை உன்னுடைய பாசம் எனக்கு வேண்டும். பாசத்தை மறக்கும் நிலைவரின் நான் இறந்திருக்க வேண்டும்.
- படுத்துக்கொண்டு சொர்கத்தை காணலாம் தலையணையில் அல்ல. தாயின் மடியில்.
Read More: Angel Numbers
Leave a Reply