Tamil Vidukathaigal – விடுகதை என்பது நமது அறிவை சோதிக்கும் ஒரு நல்ல வாக்கியம். ஒரு விடுகதை நாம் கண்டுபிடிக்க நமது மூளையை நாம் அதிகம் உபயோக படுத்துவோம். இதனால் நமது சிந்தனை திறன் அதிகம் வளரும். விடுகதை என்பது நாம் கூறுகின்ற வாக்கியத்திலேயே அதனுடைய பொருள் அடங்கி இருக்கும். மறை பொருள் என்றும் கூறலாம்.
விடுகதைகள் நாம் வினா எழுப்பி அதற்கு பதில் கூறுவதாக இருக்கும். இந்த விடுகதைகளின் நோக்கமா அறிவூட்டுவது மற்றும் நமது சிந்தனையை தூண்டுவது ஆகும். விடுகதையை விரும்பாதவர்கள் எவருமே இருக்க முடியாது.
ஒரு விடுகதைக்கு விடை தெரியவில்லை என்றால் நாம் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம். விடை தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவோம்.
தமிழ் விடுகதைகள்: (Tamil Vidukathaigal)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடுகதையை விரும்புபவர்கள் தான். நமது முன்னோர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கண்டுபுடித்த விளையாட்டு தான் இந்த விடுகதை கூறுவது.
இந்த விடுகதைகள் மூலமாக நமது மூளை மேம்படும். அறிவு திறன் வளரும். இந்த விடுகதை விளையாட்டு எளிமையானது மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது.
அனைவருக்கு பிடித்த விடுகதைகளும் அதனுடைய பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை படித்து அனைவரும் மகிழ்ச்சி பெறுங்கள்.
Tamil Vidukathaigal – தமிழ் விடுகதைகள்
- அழகான பெண் ஒருத்தி பாதிநாள் வளர்வாள் பாதிநாள் குறைவால் அவள் யார்?விடை: நிலா
- ஊசி போல உடம்பு அவன் நிற்பது எப்போதும் மேடையில் தான் அவன் யார்?விடை: ஊதுபத்தி.
- மூன்று கிளி மூன்று நிறம் மூன்றுக்குமே வேற குணம் கூண்டுக்குள் போட்டதும் அத்தனையும் சிகப்புநிறம் அது என்ன?விடை: வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு.
- அடித்தாலும், உதைத்தாலும் அழுக்கமாட்டான் அவன் யார்?விடை: பந்து.
- இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?விடை: தேள்.
- பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்?விடை: வெண்டை.
- கொதிக்கும் கிணற்றில் குதித்து உப்பி வருவான் அவன் யார்?விடை: பூரி.
- ஒரு அரண்மனையில் 32 காவலாளர்கள் அவன் யார்?விடை: பற்கள்.
- காலையில் வந்த விருந்தாளி மாலையில் காணவில்லை அவன் யார்?விடை: சூரியன்.
- இடி இடிக்கும் மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது. அது என்ன?விடை: பட்டாசு.
- கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான். அவன் யார்?விடை: கரும்பு.
- உடம்பில்லா ஒருவன் 10 சட்டை அணிந்திருப்பான் அவன் யார்?விடை: வெங்காயம்.
- கடல் நீரில் பிறந்து வளர்ந்து, மழை நீரில் மடிவது. அது என்ன?விடை: உப்பு.
- உயிர் இல்லாத நீதிபதி ஒருத்தன் ஒழுங்கான நியாயம் கூறுவான். அவன் யார்?விடை: தராசு.
- பார்த்தால் கல் தொட்டால் நீர். அவன் யார்?விடை: பனிக்கட்டி.
Vidukathaigal in Tamil with Answers (Tamil vidukathaigal)
- தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம். அது என்ன?விடை: அன்னாசிப்பழம்.
- வயிற்றில் விரல் சுமப்பான் தலையில் கிரீடம் சுமப்பான். அவன் யார்?விடை: மோதிரம்.
- அடிக்காமலே பிள்ளை அலறி துடிக்குது. அது என்ன?விடை: சங்கு.
- அன்னநடை நடந்தாலும் அலறும் தலைப்பகுதி. அது என்ன?விடை: யானை.
- அறைகளோ அறுநூறு. அத்தனையும் ஒரே அளவு. அது என்ன?விடை: தேன் கூடு.
- அந்தி வரும் நேரம். அவள் வரும் நேரம். அவள் யார்?விடை: நிலா.
- அம்மா கொடுத்த தட்டில் நீர் ஓட்டவில்லை. அது என்ன?விடை: தாமரை இலை.
- அறையடி புல்லில் ஏறுவான் இறங்குவான். அவன் யார்?விடை: பேன்.
- அந்தரத்தில் தொங்குவது செம்பும், தண்ணீரும். அது என்ன?விடை: இளநீர்.
- அறுக்க உதவாத கதிருக்கு அரிவாள். அது என்ன?விடை: பிறைச்சந்திரன்.
- அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை. அது என்ன?விடை: வகிடு.
- அம்மா புடவையை மடிக்க முடியாது. அப்பா பணத்தை என்ன முடியாது. அது என்ன?விடை: வானம், விண்மீன்.
- யாரும் ஏற முடியாத மரம். கிளைகள் இல்லாத மரம். அது என்ன?விடை: வாழை மரம்.
- அடிவாங்கி அடிவாங்கி ஊருக்கு செய்தி சொல்லுவான். அவன் யார்?விடை: தண்டோரா.
- இரவல் கிடைக்காதது. இரவில் கிடைப்பது அது என்ன?விடை: கடிகாரம்.
Tamil Vidukathaigal
இதயம் போல் துடித்து இருக்கும். இரவு பகல் முழித்துஇருக்கும். அது என்ன?
விடை: கடிகாரம்.
கலைக்கடிக்கும் செருப்பால காவல் காக்கும் நாய் இல்லை? அது என்ன?
விடை: முள்.
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அது என்ன?
விடை: தொலைப்பேசி.
வெட்டிக்கொள்வான் ஆனால் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
விடை: கத்தரிக்கோல்.
அள்ள முடியம் ஆனால் கிள்ள முடியாது. அது என்ன?
விடை: நீர்.
முள் வீட்டுற்குள்ளே மஞ்சள் குழந்தைகள். அது என்ன?
விடை: பலாப்பழம்.
மேலே குறிப்பிட்டுள்ள விடுகதைகளை நீங்கள் படித்தும் விளையாடியும் மகிழுங்கள்.
Read More:
Leave a Reply